Skip to main content

டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி முதல்வர் பழனிசாமியை சந்திக்கும் போராட்டம் அறிவிப்பு

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

tt

 


பணி நிரந்தரம், மிகை பணிக்கு மிகை ஊதியம், காலமுறை ஊதியம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் முதல்வர் பழனிசாமியை சந்திக்கும் பேரணி அடுத்த மாதம் நடைபெறுகிறது என அதன் தலைவர் பெரியசாமி இன்று திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். 

 

அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் செயல்பட்டுவரும் டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக சுமார் 30,000 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 240 நாள்கள் வீதம் 2 ஆண்டுகளில் 480 நாள்கள் பணியாற்றினால் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் முதலியன வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் நலச் சட்டங்கள் வலியுறுத்துகின்றன. இதுகுறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் அமல்படுத்தவில்லை. மேலும், தமிழக அரசு மூடிய மதுபானக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதில் தொடர் பிரச்னை நிலவிவருகிறது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் பணியாளர் குடும்பத்திற்கு 5,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

 


மது அதிகமாக விற்பனையாகும் கடைகளில் குறைந்த பணியாளர்களும், குறைவாக விற்பனையாகும் கடைகளில் அதிக பணியாளர்களையும் நியமித்து பாரபட்சம் காட்டிவரும் மாவட்ட மேலாளர்களின் நடவடிக்கையால் டாஸ்மாக் பணியாளர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு கொடுக்கும் பல்வேறு மன உளைச்சலில் 350-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மரணம் அடைந்திருக்கிறார்கள். டாஸ்மாக் துறையில் ஊழல் மலிந்துள்ளதால் மாவட்ட மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவர்களால் உருவாக்கப்பட்ட இடைத் தரகர்களை ஒழிக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலன இடங்களில் மதுபான கூடங்கள் அனுமதியில்லாமல் தனியார் டாஸ்மாக் போல் இயங்கி வருகிறது. இந்த மதுபானக் கூடங்கள் எல்லாம் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு பெரும் இலாபத்தை சம்பாதித்து அரசாங்கத்திற்கு பெரிய இழப்பு ஏற்படுத்துகிறார்கள். 
அது போல் டாஸ்மாக் பணத்தை துப்பாக்கி முனையில், அரிவாள் வெட்டி பல ஆயிரங்களை கொள்ளையடிக்கிறார்கள். டாஸ்மாக் ஊழியர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாநிலையில் இருக்கிறது. கொள்ளையடிக்கப்படும் பணத்திற்கு டாஸ்மாக் ஊழியர்களிடமே வசூல் செய்யும் நிலையும் இருக்கிறது. இதை எல்லாம் வலிறுத்தி அடுத்த மாதம் பிப்ரவரி 19-ம் தேதி தமிழக முதல்வரை சந்திக்க பேரணியாக தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ஊழியர்கள் செல்கிறோம். முதல்வரை சந்திக்கும் வரை சென்னையில் இருந்து திரும்புவது இல்லை என்று முடிவுவெடுத்து உள்ளோம்’ என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்