The task of removing the sky lotuses with a modern machine ... Deputy Chief OBS launched!

தேனி அல்லிநகரம் மந்தையம்மன் குளத்தில் அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வாரும் பணியினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

Advertisment

தேனி மாவட்டம், அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 80 ஏக்கர் பரப்பளவில் மந்தையம்மன் குளம் உள்ளது. இக்குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் நிறைந்து தண்ணீர் மாசடைந்த நிலையில், இக்குளத்தில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, தூர்வார அப்பகுதி விவசாயிகள், குடியிருப்போர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்த்திடம்கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, துணை முதல்வரின் உத்தரவின்பேரில் ஆகாயத் தாமரைகளை அகற்ற தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் தனது சொந்த செலவில் கடந்த சில நாட்களுக்கு முன் பணிகளைத் துவக்கினார்.

Advertisment

ஆகாயத்தாமரைகள் அதிகளவில் பரவி இருப்பதால் விரைந்து அகற்றுவதில் தாமதம் ஏற்படும் என்பதால், ஆகாயத் தாமரைகளை அகற்ற தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் ஏற்பாட்டில் அதிநவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்துஅதிநவீன இயந்திரம் மூலம் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியினை நேற்று (18.02.2021) தமிழக துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் பூஜை செய்தும், கொடியசைத்தும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், மாவட்ட ஆட்சித்தலைவர் மரியம் பல்லவி பல்தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 10 நாட்களுக்குள் ஆகாய தாமரைகள் முழுமையாக அகற்றப்படும் எனத் தெரிகிறது.

The task of removing the sky lotuses with a modern machine ... Deputy Chief OBS launched!

.

இப்பணிகள் குறித்து அப்பகுதி விவசாய சங்கத்தினர் கூறும்போது, 'ஆகாயத்தாமரைகளை அகற்றுவதன் மூலம் தண்ணீர் மாசுபடாமல் பாதுகாக்கப்படும். சுற்றுப்புறங்களில் நிலத்தடி நீர் உயரும். மேலும் இக்குளத்திலிருந்து நீர் மாறுகால் பாய்ந்து மீறுசமுத்திரம் கண்மாயை அடைகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அதிநவீன இயந்திரத்தை வரவழைத்து, பணிகளைத் துவக்கி வைத்த தமிழக துணை முதல்வருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருக்கும் விவசாயிகள் மற்றும் இப்பகுதியில் குடியிருப்போர் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் மஞ்சுளாமுருகன், தேனி நகரச் செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், நகர அவைத்தலைவர் முருகேசன், சார்பு அணி செயலாளர்கள், இலக்கிய அணி முருகேசன், சிறுபான்மை பிரிவு அபுதாஹீர், வர்த்தக அணி கே.எஸ்.கே.நடேசன், மாணவரணி பாலமணிமார்பன், மீனவரணி வைகை கருப்புஜி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு பாலசந்தர், நகர துணைச் செயலாளர் ரெங்கநாதன், நகரப் பொருளாளர் வீரமணி, நகர அம்மா பேரவைச் செயலாளர் சுந்தரபாண்டியன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுரேஷ், கிராம கமிட்டி தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் தாமோதரன், பொருளாளர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராஜகுரு, செல்வராஜ், அசோக் மற்றும் மயில்வேல், ஆப்பிள் முருகன், ஜெயப்பிரகாஷ், நாகராஜ், கார்த்திகேயன் உள்ளிட்டகழக நிர்வாகிகளுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.