TASAMC INCIDENT IN CHITHAMPARAM

Advertisment

ஊரடங்கு காலத்தில் 40 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக் கடைகள்முடியிருந்ததால் எப்போது கடையை திறப்பார்கள் என்று குடிமகன்கள் கத்திருந்தனர். இதனிடையே குடிமகன்கள் மதுவுக்கு பதில் எத்தனால், சொல்யூஷன் உள்ளிட்ட எரிசாரயங்களை குடித்து உயிர் இழந்த சம்பவங்களும் தமிழகத்தில் பரவலாக நடைபெற்றது.

இந்தநிலையில் கடந்த வாரம் அரசு மதுமான கடையை திறந்தது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. அதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது தமிழக அரசு. இந்த நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.அதன் அடிப்படையில் 16-ந்தேதி முதல் தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் வாங்க டோக்கன் முறையை அரசு அறிமுகம் செய்தது. இதனைத்தொடர்ந்து டோக்கன் இருந்தால்தான் மதுபாட்டில் வாங்கலாம் என்று காலையிலே குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபாட்டில்களை வாங்க டோக்கன் கொடுப்பதை அறிந்த குடிமகன்கள் ஓட்டபந்தயத்தில் ஓடுவதைபோல் ஓடி வரிசையில் நின்றனர்.

Advertisment

TASAMC INCIDENT IN CHITHAMPARAM

இதனையறிந்த சிதம்பரம் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் அவர்களை விரட்டி சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர். பின்னர் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.