Skip to main content

சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு!

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

Tariff hike at customs from April 1!

 

சென்னையைச் சுற்றியுள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 55 வரை உயர்த்தப்படவுள்ளது. அதன்படி, வானகரம், சூரப்பட்டு, பட்டரைபெரும்புதூர், நல்லூர் ஆகிய நான்கு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. 

 

வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளை அகற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், இந்த இரண்டு சுங்கச்சாவடிகளில் தற்போது கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. திருத்தணி அருகே உள்ள பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூபாய் 30- லிருந்து ரூபாய் 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இலகுரக வர்த்தக வாகனம், மினி பேருந்திற்கான கட்டணம் ரூபாய் 45- லிருந்து ரூபாய் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

 

இந்த வாகனங்கள், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 70- லிருந்து ரூபாய் 90 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பேருந்து மற்றும் டிரக் உள்ளிட்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூபாய் 95- லிருந்து ரூபாய் 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரிதாக்கப்பட்ட வாகனங்களுக்கான கட்டணம் ரூபாய் 185- லிருந்து ரூபாய் 240 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

 

ஏற்கனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் சூழல் சுங்கக்கட்டணத்தையும் அதிகரிப்பது விலைவாசியை மேலும் உயர்த்தக்கூடும் என கவலை எழுந்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story

டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து; தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Tanker truck overturned incident  

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு டேங்கர் லாரி ஒன்று ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது இந்த டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேலுமலை கணவாய் என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரம் கவிழ்ந்தது.

இதனையடுத்து டேங்கர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக கிருஷ்ணகிரி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளான லாரியில் இருந்த ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த டேங்கர் லாரியில் மேலும் ஒருவர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி தீயணைப்புத் துறையினர், டேங்கர் லாரியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் குறித்து குருப்பரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.