Advertisment

கையால் சுருட்டும் நிலையில் தார் சாலை... செலவு 71 லட்சமாம்?

The tar road is being rolled by hand... the cost is 71 lakhs?

மதுரை திருமங்கலம் அருகே 71 லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்டதாகக் கூறப்படும் சாலை தரமற்ற முறையில் இருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Advertisment

gg

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்டது வெள்ளக்குளம் கிராமம். இங்கு 2019-20 திட்டப்பணிகளின் அடிப்படையில் அமைக்கவேண்டிய சாலையானது அவசரகதியில் கடந்த வாரம் போடப்பட்டது. 71 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த சாலையினை தரமற்ற முறையில் அமைத்துள்ளதாகக் குற்றச்சாட்டுகளை அடுக்கும் வெள்ளக்குளம் கிராம மக்கள் தரமற்ற முறையில் போடப்பட்ட சாலையை கையாலேயே சுரண்டி எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த கிராமத்தின் மயானத்தில் இருந்து எஸ்.கல்லுப்பட்டி வரை உள்ள 1.4 கிலோமீட்டருக்கு போடப்பட்ட சாலையானது மிகவும் தாமற்ற முறையில் உள்ளதாக புகாரளித்தும் அதிகாரிகள்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் வெள்ளக்குளம் கிராம மக்கள்.

Advertisment

Road madurai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe