
கோவை ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர், சுப்பையா மகன் முருகானந்தம் (55). இவர் பெட்ரோல் டேங்க் லாரி ஓட்டி வருகிறார். இவர் இன்று கோத்தகிரி பகுதியிலிருந்து பெட்ரோல் டேங்க் லாரியை ஓட்டிக்கொண்டு வந்தார். அப்போது பனிப் பொழிவு கொஞ்சம் அதிகமாக இருந்தது. லாரி கீழ்தட்டபள்ளம் பகுதிக்கு வரும்போது கட்டுப்பாட்டை இழந்தது.
அதனால், அந்த லாரி 200 அடி பள்ளத்தில் விழுந்தது. இதை அறிந்த பொது மக்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே, தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் கருப்புசாமி, நிலைய முதன்மை தீயணைப்பு வீரர் மாதன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மேகநாதன், சரத்குமார், கார்த்திக், அருளானந்தம் ஆகியோர் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரியில் உள்ள டிரைவரை மீட்டனர். ஆனால், டிரைவர் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அவரின் உடலை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)