டேங்கர் லாரி விபத்து- பெட்ரோல் கசிவதால் பொதுமக்கள் அச்சம்

Tanker truck accident - Public fears over petrol leak

கோவில்பட்டியில் சாலை விபத்தில் சிக்கிய டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் வெளியேறுவது அந்த பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இன்று காலை சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியானது கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் லாரியின் பின்பகுதி சேதம் அடைந்ததால் லாரியில் இருந்த பெட்ரோல் கசிய தொடங்கியது.

அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசார், தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் டேங்கர் லாரி மீது ஃபோம் அடித்து தீ விபத்து ஏற்பட ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் டேங்கர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அந்த லாரியில் இருந்து பெட்ரோல் கசிந்து வருவதால் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Kovilpatti police Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe