ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு!

tanjore police case filed by dvac

தஞ்சையில் போலீசார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சையைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் தொடர்புடைய 600 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கவும் எஸ்.பி பெயரை பயன்படுத்தி பணம் பெற்றனர். இதில் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் 10 லட்சம் பெற்றதும், உதவி ஆய்வாளர் கண்ணன் 5 லட்சம் வாங்கியதும் தெரியவந்துள்ளது. இது குறித்த புகார் மாவட்ட எஸ்.பி. கவனத்திற்கு சென்றதையடுத்து விசாரணைநடத்துமாறு சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் இருந்து போலீசார் இருவரும் மொத்தமாக 15 லட்சம் ரூபாய் முன்பணமாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.

DVAC police Tanjore
இதையும் படியுங்கள்
Subscribe