நிலக்கரி இறக்குமதியில் டான்ஜெட்கோ முதலிடம்! 

tangedco is the first in coal imports!

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நாட்டிலேயே அதிகளவு இறக்குமதியை டான்ஜெட்கோ மேற்கொண்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், அவற்றை அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மாநில மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகங்களுக்கு மத்திய மின்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தமிழக மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனமான டான்ஜெட்கோ மூன்று மாதங்களில் 2.82 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து, முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தாண்டில் ஒவ்வொரு நாளும் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் 80 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியாவதாகவும், இந்தாண்டு அவை மிக முக்கிய மின் ஆதாரமாக மாறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

coals export TANGEDCO
இதையும் படியுங்கள்
Subscribe