தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பில் (M.E/M.TECH/M.C.A/M.ARCH) சேர்வதற்காக தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் 'டான்செட்' நுழைவு தேர்வு (TAMILNADU COMMON ENTRANCE TEST- 2019 "TANCET") நடத்தி வருகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் 08/05/2019 அன்று தொடங்கிய நிலையில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_20190525_175417.jpg)
இந்நிலையில் 'டான்செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க மே -31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலை கழகம் அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us