Advertisment

தனது நடிப்பு திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி - இளையராஜா

ஸ்ரீதேவியின் மறைவு சினிமா உலகிற்கு பெரும் இழப்பு என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக இளையராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

’மூன்றாம் பிறை’ யில் பாடல் பதிவின் போது இசைக்கேற்ப வசனங்களை பேச ஸ்ரீதேவிக்கு கற்றுக்கொடுத்தேன். ஸ்ரீதேவி நடித்த அதிகமான படங்களுக்கு நான் இசையமைத்துள்ளேன். குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே ஸ்ரீதேவியை எனக்கு தெரியும். தனது நடிப்பு திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் மறைவு சினிமா உலகிற்கு பெரும் இழப்பு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ilayaraja sridevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe