திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
வத்தலக்குண்டு தமிழக வெற்றிக் கழக ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை லாரி மூலம் திண்டுக்கல் மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் 50க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து தங்கள் சொந்த செலவில் அனைத்து பொருட்களையும் திரட்டி கேரள மாநிலம் வயநாட்டில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.