ஜூலை 31ஆம் தேதி அன்று மாலை கோடியக்கரைக்குத் தென்கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டையைச் சார்ந்த மீனவர் கலைச்செல்வன் (33), இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் காயமடைந்தார்.
தற்போது,நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர் கலைச்செல்வனை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும்,அவரது சிகிச்சை நிலவரம் குறித்து நிலைய மருத்துவ அதிகாரி உமா மகேஸ்வரனிடம் கேட்டறிந்தார்.
அப்போது மாவட்டப் பொருளாளர் சதக்கத்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் மன்சூர், மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா, நகரச் செயலாளர் அஜீஸ், சம்பத்குமார் உள்ளிட்ட மஜகவினர் உடனிருந்தனர்.