Advertisment

"சூடான் தீ விபத்து; மத்திய அரசு விரைந்து உதவ வேண்டும்" - மு.தமிமுன் அன்சாரி

சூடான் தீ விபத்தில் பாதிக்கப்பட்வர்களுக்கு மத்திய அரசு விரைந்து உதவ வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள் வைத்துள்ளார்.

Advertisment

 Ansari

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூடான் தலைநகர் கார்ட் டோமில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், 130 க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் வரும் தகவல்கள் ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலையும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்வாதாரத்தை தேடி, கடல் கடந்து சென்ற நம் உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கும். இந்நிலையை அறிந்து, அவர்களது குடும்பத்தினர் துடிதுடித்துப் போயிருக்கிறார்கள். இறந்தவர்களின் உறவுகளை தாயகத்திற்கு கொண்டு வந்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

Advertisment

அது போல் காயமடைந்தவர்களுக்கு உரிய கிசிச்சைக்கான நடவடிக்கைகளை எடுப்பதோடு, அவர்கள் அரசு செலவில் நாடு திரும்பவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Central Government Bhutan Tamimun Ansari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe