/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ta3.jpg)
நாகை மாவட்டம், நாகை சட்டமன்ற தொகுதியில் உள்ள திருமருகல் அரசுப் பள்ளியில் படித்த பவித்ரா என்ற மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படிக்க அனுமதி ஆணை பெற்றுள்ளார். இவருக்கு கன்னியாகுமரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் மாணவிக்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக ஆதினங்குடியில் உள்ள அந்த மாணவியின் குடிசை வீட்டுக்கு நேரில் சென்ற நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். மேலும் மாணவி பவித்ராவுக்கு தேவையான உதவிகளை செய்வதாக அவரின் பெற்றோரிடம் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)