Advertisment

'கலவரத்தை தூண்டுபவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்க' - பதாகையுடன் சட்டமன்றம் வந்த எம்.எல்.ஏ

 Tamimun Ansari came to the assembly with the banner 'Arrest Kalyanaramana under the National Security Act'

கோவை, மேட்டுபாளையத்தில் பாஜக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன், இஸ்லாமியர்கள் மதிக்கக்கூடிய நபிகள் நாயகத்தை இழிவாகப் பேசினார். இதனைக் கண்டித்து நேற்று (01.02.2021) நள்ளிரவில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

இதனையடுத்து நேற்று நள்ளிரவில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, அரியமங்கலம், பால்பண்ணை ரவுண்டானா ஆகிய இடங்களில்400க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று சேர்ந்து கல்யாணராமனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை கைது செய்யக் கோரியும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார், சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் போராட்டத்தைக் கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையேகல்யாணராமனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில் இன்று (02.02.2021) சட்டப்பேரவை கூட்டத்திற்கு வந்த நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி 'தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்புசட்டத்தில் கைது செய்க' என்ற பதாகையை ஏந்தியபடி வந்தார்.

police THAMIMUN ANSARI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe