காஷ்மீரில் மரணமடைந்த திருமணி இறுதி சடங்கில் தமிமுன் அன்சாரி

thirumeni.jpg

சென்னை ஆவடி அடுத்த பாலவேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜவேல். இவர் தனது மனைவி செல்வி, மகன் திருமணிசெல்வம் ஆகியோருடன் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். ஸ்ரீநகர் பகுதியை சுற்றி பார்ப்பதற்காக நேற்று முன்தினம் அனைவரும் பஸ்சில் பயணம் செய்தனர். அப்போது ஸ்ரீநகர் நர்பால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போதுகற்கள் வீசப்பட்டன. இவர்கள் சென்ற பஸ் மீதும் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் திருமணிசெல்வத்தின் தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவே இறந்தார்.

thirumeni.jpg

இன்று அவரது உடல் சென்னை பட்டாபிராமத்தில் உள்ள இல்லத்திற்கு இறுதி சடங்கிற்காக கொண்டு வரப்பட்டது.அப்போது மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. திருமேணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது தந்தைக்கு ஆறுதல் கூறினார்.அப்போது மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனமும் அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.

thirumeni
இதையும் படியுங்கள்
Subscribe