Advertisment

ஓபிஎஸ் மகனுக்கு அமைச்சரவையில் இடமா?- கேள்விக்கு தமிழிசை பதில்

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழகபாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

Advertisment

tamilsaisowdararajan interview in chennai airport

தமிழகத்தில் பாஜக ஒரு இடம்கூட பிடிக்காத நிலையில் அதிமுக பாஜககூட்டணியில் தேனியில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் அதிமுககைப்பற்றியுள்ளது. அந்த ஒரு தொகுதியில் வெற்றியடைந்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு பாஜக அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என்ற கேள்விக்கு,

யார் யாருக்கெல்லாம் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என மோடி அவர்களே தீர்மானிப்பார். அவர் கண்டிப்பாக தமிழகத்திற்கு அங்கீகாரம் கொடுப்பார். எனவே இது பற்றி அவர் முடிவு செய்வார். தமிழக மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்தான் மோடி. அதனால்தான் சென்ற ஆட்சியின் பொழுதே 5 லட்சம் கோடிக்கு முதலீடுகள் கொண்டுவரப்பட்டன. எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்பட்டது. 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கன்னியாகுமரியில் பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. இதுமாதிரி பல திட்டங்களை என்னால் பதில் சொல்லமுடியும், முத்ரா வங்கியால்மட்டுமே 1 கோடியே 90 லட்சம் பேர் பலன்பெற்றார்கள்.

Advertisment

எனவே எங்கள் நல்ல திட்டங்கள் தொடரும். எவ்வளவு கூச்சல் குழப்பங்கள் இருந்தாலும் எங்கள் பணி தொடரும் எனக்கூறினார்.

ops son P Raveendranath Kumar tamilisai sowdararajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe