Skip to main content

‘தமிழ்மொழியில் பேசவும், எழுதவும் முடியாத தமிழர்கள் வந்துள்ளீர்கள்..’ – தமிழியக்கம் விழாவில் துணை முதல்வர் பேச்சு

Published on 16/10/2018 | Edited on 16/10/2018
ops

 

உலகம் முழுவதும் உள்ள தமிழர் மற்றும் தமிழ் அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதற்கான தமிழியக்கம் என்கிற ஒருங்கிணைந்த அமைப்பின் தொடக்க விழா சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அக்டோபர் 15ந்தேதி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தீந்தமிழ் திறவுகோல் என்ற நூலினை தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னிர் செல்வம் வெளியிட்டார். மாநில தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தமிழியக்கம் வலைத்தளத்தை தொடங்கி வைத்தார். 

 

நிகழ்ச்சியில் தமிழியக்க நிறுவன தலைவரும் விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியபோது, 1916 ம் ஆண்டில் மறைமலையடிகள் தலைமையில் தமிழ்மொழி இயக்கம் தொடங்கப்பட்டது. 101ஆண்டுகள் கழித்து சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு  தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும்  உள்ள தமிழர்களையும், தமிழ் அமைப்புகளையும் ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்த தமிழியக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 2007 ம் ஆண்டில் ஐரோப்பா யூனியன் நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் அப்துல் கலாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கவிஞர் கலியன் பூங்குன்றனார் பாடலை குறிப்பிட்டு  உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று என்றும் உலகமயமாக்கல் பற்றி மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாடியுள்ளார். நமது தாய்மொழியான  தமிழ்மொழியின் முக்கியத்துவத்தை தமிழ்மக்கள் அறியாமல் உள்ளனர். உலகில் மூத்த மொழிகளாக 7 மொழிகள் உள்ளன. அதில் ஐரோப்பாவில் கிரேக்கமும் லத்தினும், மேற்கு ஆசியாவில் பாரசீகம் இபுரூ, இந்தியாவில் தமிழ் மற்றும் சமஸ்கிரதம், சீனாவின் சீன மொழிகளாகும். இவற்றில் பலமொழிகள் எழுத்து வடிவிலும் பேச்சு வடிவிலும் இல்லை. மாறாமல் இன்றும் வழக்கத்தில் இருப்பது தமிழ்மொழியும், சீன மொழி  மட்டுமே, இவற்றில் மூத்தமொழி தமிழ்மொழியாகும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் இலக்கணம், இலக்கியம் உருவாகியது, தொல்காப்பியம் என்ற தமிழ்நூல் இலக்கண வடிவில் எழுதப்பட்டது.

 

அப்படிப்பட்ட தமிழ் மொழியினை தமிழர்கள் மறந்து விடுவார்களோ என்ற நிலை உருவாகியுள்ளது. படித்தவர்களே ஆங்கிலம் கலக்காமல் தமிழ்மொழியில் பேசாத  நிலை உள்ளது. முன்பெல்லாம் ஒருவர் பேசும் மொழியை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை அறிய முடியும், ஆனால் தமிழரை அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. வேறுமொழிக்கு நாம் விரோதிகள் அல்ல. மக்களிடையே, மாணவர்களிடையே, ஒவ்வொரு குடும்பத்தினரிடையே இந்த இயக்கம் சென்று சேரவேண்டும்   நமது தமிழ்மொழியை பாதுகாக்கவும் தமிழை பரப்பவும் தொடங்கப்பட்டது தான் இந்த தமிழியக்கம். இந்த பணியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர்களும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

 

op

 

அவரை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் பேசும்போது, சிறந்த கல்வியாளர்கள் மக்களுக்கு தொண்டாற்றுபவர்களை தமிழியக்கம் மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சியாகவுள்ளது. இயக்கத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான விசுவநாதன் பேரறிஞர் அண்ணா,  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்று எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் பொறுப்புக்கள் மூலமாக மக்கள் பணியாற்றியவர். இவ்வுலகில் உள்ள தமிழ் மக்களை ஒருக்குடையின் கீழ்  இணைக்க கட்சி பாகுபாடின்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த தொண்டானது தமிழ் ஆர்வத்திற்கு பெரிதும் உதவும். தமிழ் மொழி ஒழுக்க நெறிகள்  பண்பாட்டு நிலைகளை எடுத்து காட்டும் மொழியாகும். உலகில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளது. இதில் இந்தியாவில் சுமார் 1580 மொழிகள் உள்ளன. இவற்றில் தொண்மையான மொழியாக திராவிட மொழி விளங்குகிறது. திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது, திராவிட குடும்பத்தின் முதல்மொழி தமிழ்மொழியாகும். பழமையான தமிழ் மொழி இன்னும் மாறாமல் விளங்குகிறது. ஒரு தலைமை மொழிக்கு உரிய தாய்மை வடிவம் பண்பாடு கலையறிவு மெற்ற மொழிதான் தமிழ்மொழி. அத்தகைய தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி பெருமை சேர்த்தனர். 

 

தமிழர்களாக இருந்தும் தமிழ் மொழியில் பேச முடியாமல் எழுதமுடியாமல் உள்ள உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழர்கள் வந்துள்ளனர். அவர்கள் தமிழ் மொழி பேசவும்  எழுதவும்  தமிழியக்கம்  உறுதுனையாக  இருக்கும் என்று கருதுகிறேன். விசுவநாதன் எடுத்துள்ள இந்த முயற்சி உலகில் யாரும் எடுக்க முடியாத முதல் முயற்சியாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த அமைப்பு எப்படிபட்ட சுனாமி புயல் வந்தாலும் அசைக்க முடியாத அமைப்பாக உருவாகியுள்ளது. நிகழ்ச்சியின் மூலமாக விடுவிக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தமிழக அரசு சட்டமாக இயற்றி அதனை நிறைவேற்றும். தமிழியக்கம் என்ற விதை விதைக்கப்பட்டுள்ளது இது செடியாகி மரமாகி ஆலவிருட்சமாக விளங்கி மக்களுக்கு பயனாற்றும் என்று கூறினார்.

 

இந்நிகழ்ச்சியில்  மொரிசீயஸ் நாட்டின் ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, கயானா நாட்டின் தலைமை அமைச்சர் மோசசு வீராசாமி நாகமுத்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக பொது செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், மதிமுக பொது செயலாளர் வை.கோ,  தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் போன்றோர் கலந்துக்கொண்டு பேசினர்.

 

நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தமிழியக்க தீர்மானங்கள்.

1, தமிகத்தில் தொடக்கப் பள்ளி முதல் முதல் பல்கலைக்கழகம் வரை தமிழை ஒரு பாடமாக மாணவர்கள் படித்தே ஆக வேண்டும் என்னும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்என்று தமிழியக்கம் வேண்டுகிறது.

2, உச்ச மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதியரசர்கள் பொறுப்பேற்கும்போது தேவநாகரிக எழுத்துருவில் ஒப்பமிட வேண்டும் என்னும் நடைமுறைக்கு மாற்றாக அவரவர் தாய்மொழிலேயே கையொப்பமிடலாம் என்னும் விதியை மைய அரசு நடைமுறைப் படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தையும் மைய அரசையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

3. உரிய வேலை வாய்ப்பின்மை காரணமாக தமிழ் இலக்கியம் பட்டம் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதால் தமிழ் இலக்கிய பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க ஆவன செய்யுமாறு தமிழக அரசை கோப்படுகிறது.

4, தமிழகத்திலிருந்து புறப்படும் மற்றும் தமிழகத்திற்கு வரும் வானூர்திகளிலும் தமிழகத்திலுள்ள வானூர்தி நிலையங்களிலும் தமிழிலும் அறிவிப்பு செய்திட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.