ADVERTISEMENT

தமிழர்களுக்கு 70 % முன்னுரிமை வேண்டும்- திவ்யா சத்யராஜ் கோரிக்கை!

06:08 PM Aug 27, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு பிரபல ஊட்டச்சத்து நிபுணர். அவர் சமீபத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகளுக்கு அரசாங்கம் நேரடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என விவசாயத் துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த 'மகிழ்மதி' என்ற இயக்கத்தை ஆரம்பித்து இருக்கிறார்.

'மகிழ்மதி' இயக்கம் சார்பாக அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக பல கம்பெனிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளன. இதனால் அந்த கம்பெனிகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை. பல தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். வேலை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. தமிழகத்தின் வேலை வாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும் நியாயம் கிடையாது. அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் 70 விழுக்காடு தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோஃபர் கபில் அவர்களை விரைவில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT