Advertisment

'யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்'-இஸ்ரேலில் வசிக்கும் தமிழர்கள் நிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

nn

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

Advertisment

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

Advertisment

இந்த எதிர்பாராத திடீர் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் அபாய ஒலியை ஒலிக்கச் செய்து, போர் சூழல் உருவாகியுள்ளதாகவும், போருக்குத் தயார் என்றும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு வழிகளில் இருந்தும் இஸ்ரேலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். இதனால் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிலும் குறிப்பாக காசாவை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு உடனே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள வெளிநாடு தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறையை இஸ்ரேலில் உள்ள 30 தமிழர்கள் தொடர்பு கொண்டு30 தமிழர்களும் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்ததாக தமிழர் நலத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என இஸ்ரேல் அரைத்து உத்தரவிட்ட நிலையில் இயல்பு நிலை திரும்பியதும் இந்திய தூதரகம் மூலம் தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும்தமிழர் நலத்துறை சார்பில்தகவல் வெளியாகி உள்ளது.

abroad israel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe