ADVERTISEMENT

'திறத்திலும் தரத்திலும் தமிழர்கள் சளைத்தவர்கள் இல்லை'-நிகர் ஷாஜிக்கு முதல்வர் வாழ்த்து

03:32 PM Sep 03, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை கடந்த 02-09-23 காலை 11.50 மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

விண்ணில் பாய்ந்த ஆதித்யா எல்-1 விண்கலம் முதற்கட்டமாக உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர், தமிழ் பெண்மணி நிகர் ஷாஜியை தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார். ''செங்கோட்டையில் பிறந்து ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக உயர்ந்து சாதித்ததற்கு அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. சந்திராயன் முதல் ஆதித்யா விண்கலம் வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர். இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்திற்கு நிகர் ஷாஜி தலைமை பொறுப்பேற்று இருப்பதை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். சாஜி குடும்பத்தினர் எத்தகைய பெருமையடைந்தார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT