ADVERTISEMENT

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடம்!! 

06:48 PM Sep 24, 2020 | kalaimohan

ADVERTISEMENT

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. அதன் பிறகு தொடர் சிகிச்சையின் மூலம் மீண்டும் அவரது உடல்நிலை முன்னேறிய நிலையில், தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும். கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிர்காக்கும் உபகரணங்கள் மூலம் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தகவலறிந்து நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். எஸ்.பி.பியின் குடும்ப உறுப்பினர்களுடன் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றார். பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் பெற திரைத்துறையினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT