Singer SBP's health is very worrying !!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை பாதிப்படைந்தது.அதன் பிறகு தொடர் சிகிச்சையின் மூலம்மீண்டும் அவரது உடல்நிலைமுன்னேறியநிலையில், தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின்உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும்.கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் உயிர்காக்கும் உபகரணங்கள் மூலம்தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருததாகவும்மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்துள்ளது.

Advertisment

தகவலறிந்து நடிகர்கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வருகைதந்துள்ளார். எஸ்.பி.பியின் குடும்ப உறுப்பினர்களுடன் அவரது உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றார். பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் பெற திரைத்துறையினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.