Puducherry

கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது புதுச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்தர் நடராஜன் புதுச்சேரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார். எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு 30- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் ஈ-பாஸ் இல்லாமல் வந்தது, முகக் கவசம் அணியாதது, அனுமதியின்றி கூட்டம் கூட்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment