incident in dharmapuri thoppur

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தொடர்ச்சியாக 12 கார்கள் உட்பட 15 வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி கோரவிபத்து நிகழ்ந்துள்ளது.

Advertisment

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய்ப்பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிவந்த லாரி, நிலைதடுமாறி சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் மீது மோதி, கோர விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை 7 பேர் மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொப்பூர் கணவாய்ப்பகுதி அடிக்கடி விபத்துகள்நடக்கும் பகுதி என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆனால், தற்பொழுது நிகழ்ந்திருப்பது மிகவும் கோரவிபத்து எனக் கூறப்படுகிறது. இதனால், அங்கு போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளார். பலருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த, கோரவிபத்து அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment