Skip to main content

ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு பூத் கமிட்டிகள்... வேகமெடுக்கும் எடப்பாடி அரசு..!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020
erode admk meeting

 

ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 29-ந் தேதி  ஈரோடு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.

 

இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான கே.வி. ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகளை பற்றி பேசினார்கள். மேலும் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் ஏற்கனவே உள்ள பூத் கமிட்டியுடன், புதிதாக பெண்கள் மட்டுமே உள்ள மகளிர் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க அரசின்  சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை, ஈரோடு கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மற்றும் எம்.ஜி.ஆர் சிலையை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைக்கின்றனர் எனவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

 

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், நிவர் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி கூறுவது உள்பட பல தீர்மானங்களை நிறைவேற்றியதாக அறிவித்தனர்.

 

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாலகிருஷ்ணன், கிட்டுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வில் ஒரு வாக்கு சாவடிக்கு இரண்டு பூத் கமிட்டிகள் என  வேகமெடுக்குது எடப்பாடி அரசு என உற்சாகத்துடன் கூறுகிறார்கள் ர.ர.க்கள்.

 


--------

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.