erode admk meeting

ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 29-ந் தேதி ஈரோடு மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது.

Advertisment

இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.சி.ராமசாமி தலைமை தாங்கினார்.மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏவுமான கே.வி. ராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி ஆகியோர் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகளை பற்றி பேசினார்கள். மேலும் ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் ஏற்கனவே உள்ள பூத் கமிட்டியுடன், புதிதாக பெண்கள் மட்டுமே உள்ள மகளிர் பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க அரசின் சாதனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை, ஈரோடு கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலை மற்றும் எம்.ஜி.ஆர் சிலையை அமைச்சர்கள் செங்கோட்டையன்,தங்கமணி, கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைக்கின்றனர் எனவும் இந்த கூட்டத்தில்அறிவிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், நிவர் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு நன்றி கூறுவது உள்பட பல தீர்மானங்களை நிறைவேற்றியதாக அறிவித்தனர்.

Advertisment

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பாலகிருஷ்ணன், கிட்டுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வில் ஒரு வாக்கு சாவடிக்கு இரண்டு பூத் கமிட்டிகள் என வேகமெடுக்குது எடப்பாடி அரசு என உற்சாகத்துடன் கூறுகிறார்கள் ர.ர.க்கள்.

--------