Skip to main content

ஈரோட்டில் திருமா வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய பா.ஜ.கவினர்... போலீஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது வெளிப்படையாக தாக்குதல் நடத்தி வன்முறையை ஏற்படுத்திய சம்பவம் 26 ந் தேதி காலை ஈரோட்டில் நடந்துள்ளது. சமீபத்தில் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ்.சின் மனுதர்மம் பற்றியும் அதில் பெண்களின் நிலை குறித்தும் பேசினார். இந்த பேச்சு பெண்களை  இழிவுபடுத்துவதாக சமீபத்தில் பா.ஜ.க.வுக்கு சென்ற  நடிகை குஷ்புவும் பா.ஜ.க.நிர்வாகிகளும் திருமாவளவனுக்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு எதிர்ப்பு கருத்துக்களை கொளுத்தி போட்டனர். 

திருமாவளவனை கைது செய்யக் கோரி பல ஊர்களில் காவல்நிலையத்தில்  பாரதிய ஜனதா கட்சியினர் புகார் கொடுத்தனர். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பாரதிய ஜனதா மகளிரணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த எல்லீஸ் பேட்டை என்ற இடத்தில் அவரது நண்பரான டாக்டர் நவீன் பாலாஜி என்பவரது மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க திருமாவளவன் இன்று வந்தார்.

இந்த தகவல் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினருக்கு தெரிய வர  அந்தப் பகுதியில் ஏராளமான இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கருப்புக் கொடியுடன் அங்கு திரண்டிருந்தனர். போலீஸ் டிஎஸ்பி தங்கவேலு தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது திருமாவளவன் கார் அந்த இடத்திற்கு வந்தது. உடனே பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி கருப்புக்கொடி காட்ட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது திருமாவளவன் கார் விழா நடக்கும் இடத்திற்கு சென்று விட்டது. பின்னர் பாஜகவினர் கண்டன கோஷம் எழுப்பியபடியே இருக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர் கோஷம் போட்டனர்.

பிறகு இரு தரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவர நிலை உருவானது. அடுத்தடுத்து  கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்தது.  இதில் போலீஸ் வாகனம் மீது கல் விழுந்து சேதமடைந்தது மேலும் இரண்டு இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளும் உடைந்தது இதனால் அந்தப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.  தொடர்ந்து பாரதிய ஜனதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தனித்தனியாக தங்க வைத்தனர். திருமண நிகழ்வை முடித்து திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டார்

ஒரு கட்சியின் தலைவர் கட்சி நிகழ்ச்சி அல்லது தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு வரும் போது அவரை தாக்கும் திட்டத்துடன் ஒன்று கூடி சம்பந்தப்பட்ட இடத்திற்கு இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் வந்ததும் அவர்களை உடனே அப்புறப்படுத்தி கைது செய்யாமல் போலீஸ் வேடிக்கை பார்த்ததும் வியப்பாக உள்ளது. வெளிப்படையான வன்முறையில் இறங்கும் நிகழ்வு ஜனநாயத்திற்கு ஆபத்தானது என்றும் வன்முறையின் மூலம் அரசியல் ஆதாயம் பெறும் செயலாகத் தான் இதை பார்க்க முடியும் என்று அரசியல் வட்டாரம் இச்செயலை கண்டித்து அறிக்கைகள் விட்டுள்ளது.

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.