Skip to main content

''வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020

 

 Banana farmers should be given proper compensation "MRK Panneerselvam demand!

 

விற்பனையின்றி வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், குறிஞ்சிப்பாடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 

"கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் வட்ட பகுதிகளிலும் மலை கிராமமான இராமாபுரம் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முக்கனிகளில் ஒன்றான வாழை பயிரிட்டு வருகின்றனர். வாழையில் பூவன்,  ஏலக்கி, செவ்வாழை, கற்பூரவல்லி, ரஸ்தாளி, நேந்திரன், நாடு சக்கை போன்ற பல்வேறு ரக வாழைகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில், ஆடிமாத பருவத்தில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக வாழைத்தார் அறுவடை செய்து வருகின்றார்கள்.

அதேசமயம் வாழை அறுவடை காலம் ஆரம்பிக்கும் போது கொடிய கரோனா நோய் ஆரம்பமாகிவிட்டது.  கரோனா நோய்  காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு எந்த செயல்பாடும் இல்லாமல் போனது. கடந்த வருடம் வாழைத்தார் ரூபாய் 400லிருந்து ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது.  ஏலக்கி போன்ற உயர் ரக வாழை கடந்த வருடம் ஒரு கிலோ ரூபாய் 60 வரை விற்பனை செய்யப்பட்டது.  இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.  இந்த வருடம் கரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக பூவன் வாழை தார் ஒன்று ரூ. 70, 80, 90, 100 என விற்பனையாகின்றன.  ஏலக்கி 1 கிலோ ரூபாய் 20, 22, 30 என விற்பனையாகின்றன.  வாழை வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதும் இல்லை.  இதனால் வாழை தார் மரத்திலேயே பழுத்து வீணாகின்றன.

வாழையை விளைவிக்க ஒரு தார் மீது ரூபாய் 150 லிருந்து 200 ரூபாய் வரை செலவாகின்றன. சூறாவளி காற்றில் இருந்து பாதுகாக்க சவுக்கு கழி கட்ட ரூபாய் 50 செலவாகின்றன. வாழை விற்பனைக்காக மும்பை, ஆந்திரா, கேரளா, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் அதிகப்படியான அளவில் ஏற்றுமதியாகும்.தமிழகத்திலுள்ள சென்னையில் கோயம்பேடு அதனை சுற்றியுள்ள பெரு நகரங்களுக்கும் பல வெளி மாவட்டங்களுக்கும் தினமும் வாழை ஏற்றுமதியாகும்.

ஆனால் இவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதால்  வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு பயிர் செலவு ரூபாய் ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை செலவாகிறது.  செலவு செய்து ஒரு ஏக்கருக்கு ரூபாய் 70 ஆயிரத்திற்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் வாழை விவசாயிகள் தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனி நபர் கடன்கள் என வாங்கிய கடனை கட்ட முடியாமல் வேதனையில் உள்ளனர்.  சூறாவளி காற்று ஒரு பகுதியை மட்டும் பாதிக்கும்.  ஆனால் கொரோனா நோய் ஊரடங்கால் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு விட்டது.  

எனவே அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தேசிய, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதோடு மட்டுமல்லாமல் நஷ்ட ஈடாக ஏக்கருக்கு ரூபாய் 50,000 வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.