ADMK OPS SPEECH

கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.கட்சிக்கு மட்டுமே தொண்டர்கள், நிர்வாகிகள் விசுவாசமாக இருக்க வேண்டும்.எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நான் எண்ணியதில்லை.கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பவர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கவேண்டும். நடந்தது நடந்தவையாகவேஇருக்கட்டும் இனிமேல் நடப்பவை நல்லவையாக அமையட்டும் என்றார்.

Advertisment

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்ததையடுத்து அமைச்சர்கள் சிலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். அதனைத்தொடர்ந்து தேனியில் ஓ.பி.எஸ்ஸின்தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம்தான்அடுத்த முதல்வர் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டநிலையில் சர்ச்சை எழுந்தது. அதனை அடுத்து அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ.பி.எஸ், முதல்வர் ஈ.பி.எஸ் என இருவரது இல்லங்களிலும் மாறிமாறி ஆலோசனைகள் மேற்கொண்டநிலையில் தலைமையின் ஒப்புதலின்றி முதல்வர் வேட்பாளர் பற்றி பேசக்கூடாது என்ற அறிக்கை வெளிவந்தது. இந்நிலையில் தற்பொழுது துணை முதல்வர் ஓ.பி.எஸ் இந்த அறிவுறுத்தலை மனம்திறந்துதொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.