Advertisment

ஓ.பி.எஸ்-இன் உத்தரவு... கிழிக்கப்பட்ட ஆதரவு போஸ்டர்... முதல்வர் இல்லத்தில் ஆலோசனை!1

admk ops-eps politics

மூத்த அமைச்சர்களுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தியநிலையில் தேனி, பெரியகுளம், தென்கரையில் ஓ.பி.எஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் தற்போது கிழிக்கப்பட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இந்நிலையில் சென்னையில் பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்-இன் வீட்டின் அருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். துணை முதல்வருடன் ஆலோசனை முடிந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் அனைவரும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு ஆலோசனை நடத்த சென்றுள்ளனர். மூத்த அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்தமிழகமுதல்வர் இல்லத்திற்கு சென்று ஆலோசித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் தனக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அகற்ற அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அதன் காரணமாகவே போடியில் ஒட்டப்பட்டிருந்த அவரது ஆதரவு போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'ஓர்வழி நின்றுநேர் வழி சென்றால் நாளை நமதே' என ஒற்றுமை பாடியிருந்தார் ஓ.பி.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

admk ops_eps Poster
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe