சென்னையில் 43 வது புத்தகக் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிகழ்விடம் தற்பொழுது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு 43 வது சென்னை புத்தகக் கண்காட்சி பச்சையப்பன் கல்லூரியின் எதிரே உள்ள ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புத்தகண்காட்சி நடைபெறும் இடம் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.