Published on 05/11/2021 | Edited on 05/11/2021

தமிழ்நாட்டில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்திருப்பதாவது, ‘சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (05.11.2021) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
டெல்டா மாவட்டங்களில் 7ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். வங்கக் கடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலயில், இன்று பகல் சென்னை, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.