தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் இது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக மாநில தலைநகரில் தண்ணீர் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோடை காலம் முடிவடைந்த நிலையில் தண்ணீர் பஞ்சம் நீடித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. அரசின் அனுமதி இல்லாமல் பல நிறுவனங்கள் ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சி வருகின்றனர். சென்னை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, செம்பரப்பாக்கம் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் வறண்டு காணப்படுகிறது.

Advertisment

CHENNAI WATER PROBLEM

சென்னை மாநகரில் இயங்கும் பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களை வீட்டில் இருந்து குடிநீரை பாட்டில்களில் எடுத்து வருமாறு அறிவுறுத்தியுள்ளது. அதே போல் தனியார் கார் தயாரிப்பு நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டில் இருந்து குடிநீர் எடுத்து வருமாறு அறிவுறுத்தி வருகிறது. சென்னையில் ஓ.எம்.ஆர் பகுதி மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஐடி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளனர். இந்த நிறுவனங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு முயற்சிகளை நிறுவனங்கள் எடுத்து வருகின்றனர்.

IT EMPLOYEES

Advertisment

ஓ.எம்.ஆர் பகுதிக்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இவற்றில் 60% தண்ணீரை ஐடி நிறுவனங்கள் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறே பணியாற்ற உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஐடி நிறுவனங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாக ஐடி நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.