Skip to main content

செப்டம்பர்- 1 முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம்- தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு!

Published on 28/08/2019 | Edited on 28/08/2019

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு, செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெறவுள்ளது. எனவே தமிழக வாக்காளர்கள் வாக்காளர் அட்டையில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பினால் இணைய தள முகவரி: https://www.nvsp.in/ சென்று விண்ணப்பிக்கலாம். 
 

tamilnadu voter list add name and data correction start sep1 to sep 30 apply online



மேலும் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்பதை இணையதளம் மூலம் சரிபார்த்து கொள்ளலாம். அதேபோல் புதிய வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டுமென்றால், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உள்ளிட்ட 14 ஆவணங்களை கொண்டு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு கூறினார். வாக்காளர்கள் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், சரிபார்க்கவும் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். 2020- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழக வாக்காளர்களின் முழு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

'அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்'-சாஹூ வேண்டுகோள்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
'Everyone should vote without fail'-Sahu pleads

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ பேசுகையில், ''ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தயார் நிலையில் வைத்துள்ளோம். ஈவிஎம் மிஷின்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உள்ள வாக்குச் சாவடிகளுக்கு நாளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல் தேர்தல் பணியாளர்கள் நாளை மாலைக்குள் அந்தந்த வாக்குச்சாவடி பகுதிகளுக்குச் சென்று சேருவார்கள். பாதுகாப்பு நடவடிக்கைக்காக போலீசார், துணை ராணுவ படையினர் எந்தெந்த பகுதிகளில் இருக்க வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 68,000 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. அதில் 45 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் எங்கெங்கு இன்டர்நெட், ரிசப்ஷன் எல்லாம் நன்றாக இருக்குமோ அங்கெல்லாம் வாக்குச்சாவடியைக் கண்காணிப்பதற்காக சிசிடிவி மூலமாக கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் முதியவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக ரேம் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் வீல் சேர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாக்காளருமே தவறாமல் வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும்'' என்றார்.

Next Story

தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
The High Court ordered the Election Commission to take action

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. அற்ப காரணங்களுக்காக திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தலைப்பில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக சார்பில் சில விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. எனவே அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

The High Court ordered the Election Commission to take action

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்யநாராயனா அமர்வில் இன்று (15.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிடுகையில், “தேர்தல் விளம்பரஙகள் தொடர்பாக விதிமுறைகள் வகுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இது குறித்து வரும் 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.