tamilnadu voter id list released election officer

Advertisment

2021- ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின் படி மொத்தம் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.09 கோடி பெண் வாக்காளர்கள், 3.01 கோடி ஆண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 6,385 வாக்காளர்கள் உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக நாகை மாவட்டம், கீழ்வேளூர் தொகுதியில் 1.73 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisment

வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய டிசம்பர் 15- ஆம் தேதி வரை வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை திருத்தப்பட்டு ஜனவரி 20- ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.