Advertisment

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

tamilnadu voter id list ias officers appointed

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (19/11/2020) காலை, தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisment

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளைக் கண்காணிக்க 10 மூத்த ஐ.ஏ.எஸ்அதிகாரிகளை நியமித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ்நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கிர்லோஷ் குமார் ஐ.ஏ.எஸ்நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்கு சிஜிதாமஸ் வைத்யன் ஐ.ஏ.எஸ்நியமிக்கப்பட்டுள்ளார். நாகை, தஞ்சை, திருவாரூர்மாவட்டங்களுக்கு சண்முகம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல், திண்டுக்கல், கரூர் மாவட்டங்களுக்கு சிவசண்முகராஜா ஐ.ஏ.எஸ்., கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்., தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு மா.வள்ளலார் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஆபிரகாம் ஐ.ஏ.எஸ்., கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களுக்கு கருணாகரன் ஐ.ஏ.எஸ்., அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு சஜ்ஜன்சிங் ரா.சவன் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று, வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் பற்றி ஆய்வு செய்து, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

election commission ias officers Tamilnadu verification voter list
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe