tamilnadu vikravandi and nanguneri assembly by election

விக்கிரவாண்டி தொகுதியில் விறுவிறு வாக்குப்பதிவு. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த தொகுதியில் காலை 09.00 மணி நிலவரப்படி 12.84% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் நாங்குநேரியிலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் விறுவிறு வாக்குப்பதிவு. இந்த தொகுதியில் காலை 09.00 மணி நிலவரப்படி 18.41% வாக்குகள் பதிவாகி உள்ளது. நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட விஜயநாராயணம், பரப்பாடி, கோவன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள 24 வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றன. புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் காலை 09.00 மணி நிலவரப்படி9.66% வாக்குகள் பதிவாகியுள்ளது.

Advertisment