நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, தற்போது வேலூரில் நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் தனது வாக்கு வங்கியை தக்க வைக்க வேண்டும். இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என நினைக்கிறது.இதனால் அனைத்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என பெரிய தேர்தல் பணிக்குழுவை வேலூரில் இறக்கியுள்ளது அதிமுக தலைமை.

Advertisment

tamilnadu vellore lok sabha election money distributed electon commission

இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் நேற்று முதல் பண விநியோகம் தொடங்கியுள்ளது அதிமுக. ஓட்டுக்கு ரூபாய் 300 வீதம் என்று 80 சதவீதம் பணப்பட்டுவாடாவை முடித்துள்ளதாம். அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டுள்ளதால் பணப்படுவாடா எந்த தடையும் இல்லாமல் நடக்கிறதாம். பணப்பட்டுவாடாவை முடித்து விட்டு ஆகஸ்ட் 3- ஆம் தேதியுடன் தொகுதியை விட்டு செல்கிறார்களாம்.