Advertisment

'10,906 காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்'- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு!

tamilnadu uniformed services recruitment board announced

தமிழகத்தில் காலியாக உள்ள 10,906 காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் செப்டம்பர் 26- ஆம் தேதி முதல் அக்டோபர் 26- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10,906 பணியிடங்களுக்கு டிசம்பர் 13- ஆம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும். 37 மாவட்டங்களில் உள்ள மையங்களில் 1 மணி 20 நிமிடங்கள் எழுத்துத்தேர்வு நடைபெறும். ஆயுதப்படையில் இரண்டாம்நிலை காவலர் பதவிக்கு 3,099 பெண்கள், திருநங்கைகள் உள்பட 3,784 பேர் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம்நிலை காவலர் பதவிக்கு 6,545 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சிறைத்துறையில் இரண்டாம்நிலை காவலர் பதவிக்கு 119 பேர் தேர்வாக உள்ளனர். தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 10- ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வி தகுதியைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது. 01/07/2020 தேதியின்படி 18 வயது நிறைவுற்று 24 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்." இவ்வாறுஅந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

Announcement tnusrb
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe