தமிழகத்தில் நாளை (10/11/2020) முதல் திரையங்குகள் செயல்பட அனுமதி அளித்த தமிழக அரசு, அதற்கான கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திரையரங்குகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக திரையரங்குகளை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

இதனிடையே, வி.பி.எஃப் கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் புதிய படங்கள் வெளியாகாது என்று இயக்குனரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமானபாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இதனால் நாளை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.