tamilnadu temples staffs 33% allowed tn government

Advertisment

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அ, ஆ பிரிவு அலுவலர்கள் 33% பேருடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். வெளித்துறை செயலாளர் 33% சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும். உள்துறை பணியாளர்கள் தேவைக்கேற்ப பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அ, ஆ பிரிவு அலுவலர்கள் தினமும் அலுவலகத்திற்கு வர வேண்டும்.

சளி, இருமல், காய்ச்சல் உள்ள பணியாளர்களைப் பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கோயில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. பணிக்கு வரும் பணியாளர்கள் முகக் கவசத்துடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.