Skip to main content

ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

2020- 2021 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். அதன்படி நடப்பாண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூன் 27, 28 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

tamilnadu teachers recruitment board annual planner year based on 2020-21


மேலும் முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 1- ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியர் பணி தேர்வு ஜூலை 9- ஆம் தேதியும் நடைபெறுகிறது. பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 17- ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://trb.tn.nic.in/ என்ற இணையதள முகவரியை அணுகலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
6 Rameswaram fishermen freed

ராமேஸ்வரம் மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருந்தனர். மேலும் அவர்களின் இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிக்கே வந்து சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த கைது சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய பிறகு கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் மீனவர்களின் இரு விசைப்படகுகளையும் நாட்டுடைமையாக்கி உத்தரவிட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது! 

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

Money was found in the house of the minister's assistant!

 

மேற்கு வங்கம் மாநிலத்தின் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அபிர்தா சாட்டர்ஜி தொடர்புடைய மீண்டும் 21 கோடி ரூபாய் பணம், கட்டுக்கட்டாக சிக்கியுள்ளது. 

 

ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, அமைச்சர் பார்த்தா சாட்டார்ஜி அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜி உள்ளிட்டோரை கைது செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அர்பிதா முகர்ஜி வீட்டில், கடந்த ஜூலை 23- ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட சோதனையில் 21 கோடி ரூபாய் ரொக்கமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. 

 

இந்த நிலையில், அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று (27/07/2022) மீண்டும் சோதனை செய்ததில், 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஊழல் புகாரில் கைதாகியுள்ள அமைச்சர் பார்த்தா சாட்டார்ஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கவும், நடவடிக்கை எடுக்கவும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனிடம் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்தி அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.