tamilnadu tasmac liquor price increased

தமிழகத்தில் மதுபானத்தின்விலையை உயர்த்தி அறிவித்துள்ளது டாஸ்மாக் நிறுவனம்.அதன் படி, டாஸ்மாக்கில் சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூபாய் 10 அதிகரிக்கப்பட்டுள்ளது. நடுத்தர, பிரீமியம் வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானங்களின் விலை உயர்வு நாளை (07/05/2020) முதல் டாஸ்மாக்கில் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018- 2019 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் வருவாய் ரூபாய் 31,157 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

tasmac

இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீதான ஆயத்தீர்வை வரியைத் தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டதாக டாஸ்மாக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் நாளை (07/05/2020) டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.