Cuddalore students secured places in UPSC

இன்று (ஆகஸ்டு 4) வெளியான யூ.பி.எஸ்.சி (UPSC) சிவில் சர்வீசஸ் தேர்வின் நேர்முகத் தேர்வுகள் முடிவில் கடலூரைச் சேர்ந்த மாணவிகள் 2-ஆவது, 3-ஆவது இடம் பெற்றுள்ளனர்.

Advertisment

யூ.பி.எஸ்.சி. எனப்படும்மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசின் பல்வேறு உயர் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான அமைப்பாகச் செயல்படுகிறது. தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தகுதியானவர்களைப் பணி நியமனம் செய்து வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்பட 829 இடங்களுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல் நடைபெற்றது. கரோனா ஊரடங்கினால் நேர்காணலில் தாமதம் ஏற்பட்டு, நேற்று முன்தினம் வரைநேர்காணல் நடந்து முடிந்தது.இதன் முடிவுகளை யு.பி.எஸ்.சி இன்று வெளியிட்டது.

Advertisment

இந்தத் தேர்வில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்ததமிழக மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7-ஆவது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். இதேபோல் இந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Advertisment

அதேசமயம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இராமநாதன் என்பவர் மகள்ஐஸ்வர்யா என்பவர் தமிழக அளவில் இரண்டாம் இடமும், இந்திய அளவில் 47ஆவது இடமும் பிடித்துள்ளார்.

இதேபோல் பண்ருட்டி வட்டம், பண்டரக்கோட்டை சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவப்பிரகாசம் மகள், பிரியங்கா மாநில அளவில் மூன்றாம் இடத்தையும், இந்திய அளவில்68- ஆவது இடத்தையும்,பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவி தேசிய அளவில் 36-ஆவது இடத்தையும், புதுச்சேரி மாநிலத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார்.