சென்னை பல்லவன் இல்லம் அருகே இன்று (17.03.2023) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளனம் இணைந்து வருகின்ற தமிழ்நாடு பட்ஜெட்டில் மின் வாரியம் மற்றும் அரசுத் துறை பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது போல் அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிட வேண்டி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.