Advertisment

10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

tamilnadu state board 10th exam time tables released

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "ஜூன் 1ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள வேதியியல், கணிதவியல், புவியியல் பாடங்களுக்கு தேர்வுகள் ஜூன் 2ஆம் தேதி முதல் நடைபெறும். பிளஸ் 2 வகுப்பைச் சேர்ந்த 36,842 மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும்" என அறிவித்திருந்தார்.

Advertisment

tamilnadu state board 10th exam time tables released

அதன் தொடர்ச்சியாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி மொழிப் பாடத்திற்கான தேர்வு; ஜூன் 3ஆம் தேதி ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடைபெறும். ஜூன் 5- ஆம் தேதி கணிதம், ஜூன் 6- ஆம் தேதி விருப்ப மொழிப் படத்திற்கான தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் ஜூன் 8- ஆம் தேதி அறிவியல், ஜூன் 10- ஆம் தேதி சமூக அறிவியல், ஜூன் 12- ஆம் தேதி தொழிற்பிரிவு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மார்ச் 27- ஆம் தேதி தொடங்கவிருந்த 10- ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

minister sengottaiyan Tamilnadu 10th board exam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe