Advertisment
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 68,03,090 பேர் பதிவு செய்து அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு வேலைக்காக பதிவு செய்த 68 லட்சம் பேரில் 1,31,449 மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர். அதேபோல் நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி 58 வயதுக்கும் மேற்பட்ட 7,645 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.