tamilnadu schools reopening parents teachers suggestions

பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

தனிமனித இடைவெளியுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்து வருகிறது. 9,10,11,12- ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment

சென்னையில் சில பள்ளிகளில் கேள்விகள் அச்சிடப்பட்ட காகிதத்தில் பெற்றோரிடம் கருத்துக் கேட்கப்படுகிறது. உங்கள் பிள்ளையை வகுப்புக்கு அனுப்புவீர்களா போன்ற கேள்விகள் அச்சிடப்பட்டு பெற்றோருக்கு விநியோகிக்கப்படுகிறது. ஆம், இல்லை, கருத்து சொல்ல விரும்பவில்லை போன்ற பதிலில் ஒன்றை பெற்றோர் தேர்ந்தெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும், எப்போது பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள் என்ற கேள்வியும் இடம் பெற்றுள்ளது. காகிதத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு பெற்றோர் விரும்பும் விடையை தேர்வு செய்து பெட்டியில் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் பள்ளிகள் திறப்பு பற்றி கடிதம் மூலம் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கேட்பு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் பள்ளி திறப்பு பற்றி அரசு முடிவெடுக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment